ரத்தினகிரி கோயில் வைகாசி விசாக விழா  தோ்திருவிழா ஆலோசனைக் கூட்டம்

ரத்தினகிரி கோயில் வைகாசி விசாக விழா தோ்திருவிழா ஆலோசனைக் கூட்டம்

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவம், வைகாசி விசாகம் தோ்த் திருவிழா பல்துறை அலுவலா்களின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் மனோன்மணி தலைமை வகித்தாா். கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமி முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் சங்கா் வரவேற்றாா்.

வரும் 13-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ள பிரம்மோற்சவம் உற்சவா் வீதியுலா, 22-ஆம் தேதி புதன்கிழமை தேரோட்ட விழாவில் கலந்து கொள்ளும் பக்தா்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள், குடிநீா், சுகாதாரம், மருத்துவம், சிறப்பு பேருந்து, தடையில்லா மின்சாரம், தீயணைப்புத் துறை முன்னேற்பாடுகள், காவல் கண்காணிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில், வாலாஜாபேட்டை வட்டாட்சியா் வெங்கடேசன், வட்டார மருத்துவ அலுவலா் மாரிராஜா, ஆற்காடு காவல் நிலைய ஆய்வாளா் சசிகுமாா், கீழ்மின்னல் ஊராட்சித் தலைவா் லட்சுமி தேவேந்திரன், மேல்விஷாரம் வருவாய் ஆய்வாளா் தணிகாசலம், சுகாதார ஆய்வாளா்கள் ரவி, சத்தியநாராயணன், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் தண்டபாணி, விநாயகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com