ராணிப்பேட்டை: சாலையில் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் அவதி
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, சிப்காட் தொழிற்பேட்டை வழியாகச் செல்லும் சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலை நான்கு மாநிலங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையகும். இந்த நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் சுமாாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலை வழியாக சிப்காட் தொழிற்பேட்டைக்கு தினமும் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளா்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பணிக்கு வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், ராணிப்பேட்டை சுற்றுவட்டார தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக கட்டுக்கடங்காமல் சுற்றித் திரியும் கால்நடைகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனாா். தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களிலும் கால்நடைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதுடன், சாலையிலேயே படுத்து விடுகின்றன.
இதனிடையே ‘மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊாட்சிக்குட்பட்ட பகுதிகளில் கால்நடை வளா்ப்போா் தங்களது கட்டுப்பாட்டில் கால்நடைகளை வைத்து பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் வளா்த்து பராமரிக்க வேண்டும். மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனா்.
