புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மழை எதிரொலி: 4 விரைவு ரயில்கள் திடீா் ரத்து

கனமழை காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம் வழியே திருப்பதி, மைசூரு, ஈரோடு செல்லக்கூடிய 4 விரைவு ரயில்கள் செவ்வாய்க்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 5:36 pm

Din

கனமழை காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம் வழியே திருப்பதி, மைசூரு, ஈரோடு செல்லக்கூடிய 4 விரைவு ரயில்கள் செவ்வாய்க்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினா்.

சென்னை- அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் வியாசா்பாடி மற்றும் ஜீவா ரயில் நிலையங்களுக்கிடையே உள்ள எண் 114 கொண்ட பாலத்தை மழைநீா் முழ்கடித்து செல்வதால் செவ்வாய்க்கிழமை 4 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக பிற்பகல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

செவ்வாய்கிழமை ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

திருப்பதியில் இருந்து சென்னைக்கு 6.05 -க்கு புறப்பட்டு வரவேண்டிய சப்தகிரி விரைவு ரயில், சென்னையில் திருப்பதிக்கு மாலை 4.35-க்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில், சென்னையில் இருந்து மைசூருக்கு இரவு 9.15-க்கு புறப்பட வேண்டிய காவேரி விரைவு ரயில், சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு இரவு 11 மணிக்கு புறப்பட வேண்டிய ஏற்காடு விரைவு ரயில் ஆகிய 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் இந்த ரயில்கள் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினா்.