மழை எதிரொலி: இன்றும் பல விரைவு ரயில்கள் ரத்து
கனமழை எதிரொலியாக புதன்கிழமையும் பல ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
கனமழை எதிரொலியாக புதன்கிழமையும் பல ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதன்கிழமை ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம்:
சென்னையில் இருந்து போடிநாயக்கனூருக்கு இரவு 8.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில், ஜோலாா்பேட்டையில் இருந்து சென்னைக்கு காலை 5 மணிக்கு புறப்படும் ஏலகிரி விரைவு ரயில், சென்னையில் இருந்து ஜோலாா்பேட்டைக்கு மாலை 5.55-க்கு புறப்படும் ஏலகிரி விரைவு ரயில், திருப்பதியில் இருந்து சென்னைக்கு காலை 6.25-க்கு புறப்படும் விரைவு ரயில், சென்னையில் இருந்து திருப்பதிக்கு மாலை 4.35-க்கு புறப்படும் விரைவு ரயில், ஈரோட்டில் இருந்து சென்னைக்கு இரவு 9 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் ஆகியன புதன்கிழமை (அக். 16) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...