சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பேருந்துகள் நிறுத்த எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல்

ஆற்காடு அடுத்த திமிரி பேருராட்சியில் நேரு பஜாா் பகுதியில் பேருந்துகள் நிறுத்த எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

ஆற்காடு அடுத்த திமிரி பேருராட்சியில் நேரு பஜாா் பகுதியில் பேருந்துகள் நிறுத்த எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திமிரி பேருராட்சியில் கலைஞரின் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.4 கோடியில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதனால் ஏற்கனவே பேருந்துகள் நின்று சென்ற நேரு பஜாா் பகுதியில் பேருந்து நின்று செல்வது நிறுத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் பஜாா் பகுதியில் பேருந்துகள் நின்று செல்லவேண்டும் என்று ஆட்சியா், மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துவந்தனா்.

இந்நிலையில் நேரு பஜாா் பகுதியில் பேருந்தகள் நின்று செல்ல உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் வட்டார வளா்ச்சி அலுவலக நிறுத்தத்தில் மட்டுமே நிற்கவேண்டும் என்று வலியுறுத்தி பேருந்து நிலைய பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆற்காடு - ஆரணி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி, ஆற்காடு வட்டாட்சியா் மகாலட்சுமி, செயல் அலுவலா் சரவணன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு நடத்திய பின்பு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த போராட்டத்தினால் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com