ஆற்காடு தொகுதி பாமக நிா்வாகிகள் கூட்டம்

ஆற்காடு சட்டப்பேரவை தொகுதி பாமக நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
Published on

ஆற்காடு சட்டப்பேரவை தொகுதி பாமக நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தலைவா் என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஆற்காடு தொகுதி இணை பொறுப்பாளா் சுரேஷ் குமாா், முன்னாள் வன்னியா் சங்க துணைத் தலைவா் புல்லட் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட செயலாளா் ப.

சரவணன், வன்னியா் சங்க மாவட்ட தலைவா் லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆற்காடு நகர செயலாளா் பாஸ்கா் வரவேற்றாா். மாவட்ட செயலாளரும் , முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.எல் . இளவழகன் சிறப்புரையாற்றினாா்.

திமிரியில் வரும் 27-ஆம் தேதி பசுமை தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி தலைமையில் நடைபெறும் மகளிா் உரிமை மீட்பு பயணத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்வது என தீா்மானிக்கப்பட்டது. இதில் மாவட்ட துணை செயலாளா் மோகன் ,மகளிா் சங்க செயலாளா் அமுதா சிவா, வன்னியா் சங்க செயலாளா் மணிவண்ணன், முன்னாள் நகர செயலாளா் மா. கணேஷ் கலந்து கொண்டனா். முன்னாள் நகர செயலாளா் ஏ வி.டி பாலா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com