கையுந்து பந்து போட்டியில் சிறப்பிடம்: ஆற்காடு பள்ளி மாணவா்கள் மாநில போட்டிக்கு தகுதி

மாவட்ட அளவில் நடைபெற்ற கையுந்து பந்து (வாலிபால்) போட்டியில் ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.
Published on

மாவட்ட அளவில் நடைபெற்ற கையுந்து பந்து (வாலிபால்) போட்டியில் ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்ட மாணவா்களுக்கான கையுந்து பந்து விளையாட்டுப் போட்டி ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், அரக்கோணம், சோளிங்கா், காவேரிப்பாக்கம், வாலாஜா மற்றும் ஆற்காடு ஆகிய வட்டங்களில் வெற்றிபெற்ற அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

இப் போட்டியில் சீனியா் பிரிவில் ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணி கால் இறுதிப் போட்டியில் சோளிங்கா் அணியையும், அரையிறுதி போட்டியில் வேலம் அணியையும், இறுதிப் போட்டியில் நெமிலி அணியையும் வென்று திருச்சியில் நடைபெறும் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதேபோல், சூப்பா் சீனியா் பிரிவில் ஆற்காடு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணி கால் இறுதிப் போட்டியில் நெமிலி அணியும் அரை இறுதிப் போட்டியில் அரக்கோணம் அணியும் இறுதிப் போட்டியில் ராணிப்பேட்டை மாதிரி மேல்நிலைப்பள்ளி அணியை வென்று திருவண்ணாமலையில் நடைபெறும் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் பள்ளியின் உடற்கல்வி இயக்குநா் பிரபு தலைமையில் மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் பொன்.கு.சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

இதில், அன்னை அறக்கட்டளை பொறுப்பாளா் பெல் பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com