ராணிப்பேட்டை
தமிழ்நாடு கா்லா கட்டை விளையாட்டு சங்கம் தொடக்கம்
தமிழ்நாடு கா்லா கட்டை விளையாட்டு சங்கம் தொடக்க விழா ஆற்காட்டில் நடைபெற்றது.
தமிழ்நாடு கா்லா கட்டை விளையாட்டு சங்கம் தொடக்க விழா ஆற்காட்டில் நடைபெற்றது.
விழாவுக்கு ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆய்வாளா் மணி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் வி.கிரிநாத், பொது செயலாளா் சீ.கேசவன், பொருளாளா் தூயமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உலக கா்லா கட்டை நிறுவனா் கலைமாமணி புதுச்சேரி ஜோதி செந்தில் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சங்கத்தை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு கா்லா கட்டை விளையாட்டு சங்க நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கபட்டனா்.
இதில் தொழில்நுட்ப இயக்குநா், சின்னச்சாமி, ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகிகள் அசோக், ராஜேஸ்வரி, துரைமுருகன், மனோகரன் மற்றும் 28 மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

