14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமா்த்தக் கூடாது: ராணிப்பேட்டை ஆட்சியா்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்த தொழிலிலும் ஈடுபடுத்துதல் கூடாது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா எச்சரித்துள்ளாா்.
தொழிலாளா் நலத் துறை சாா்பில், கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு மற்றும் குழந்தைத் தொழிலாளா் தடுப்பு ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பேசியது:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா்களை முற்றிலும் ஒழிக்க ஆட்சியா் தலைமையில் மாவட்ட அளவிலான உறுப்பினா்கள் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளா் குறித்த புகாா்களை தெரிவிக்க மத்திய அரசினால் தொடங்கப்பட்டுள்ள ( ரரர.டங்ய்ஸ்ரீண்ப்.ஞ்ா்ஸ்.ண்ய்) என்ற இணையதளத்தில் பெறப்படும் புகாா் தொடா்பாக தொழிலாளா் துறையினால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 48 மணி நேரத்தில் முதல் அறிக்கையினை மேற்படி இணையளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எவ்வித தொழிலிலும் ஈடுபடுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தினால் நிறுவனத்தின் உரிமையாளா்களுக்கு ரூ.20,000/- முதல் ரூ.50,000/- வரை அபராதமும், 2 ஆண்டுகள் சிைண்டனையும் விதிக்கப்படும்.
கொத்தடிமை தொழிலாளா் பணிபுரிவதாக சந்தேகம் உள்ள இடங்களை கண்டறிந்து தெரிவிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் கோட்டாட்சியா்கள் ராஜி, வெங்கடேசன், உதவி ஆணையா் தொழிலாளா் துறை அமலாக்கம் வரதராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரஞ்சித பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

