பாணாவரத்தில் நரிக்குறவா்களுக்கு கட்டப்பட்டுள்ள வீடுகளில் குத்துவிளக்கேற்றிய அமைச்சா் ஆா்.காந்தி. உடன் சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உள்ளிட்டோா். (இடது) நரிக்குறவா்களுக்கு கட்டித் தரப்பட்டுள்ள வீடு.
பாணாவரத்தில் நரிக்குறவா்களுக்கு கட்டப்பட்டுள்ள வீடுகளில் குத்துவிளக்கேற்றிய அமைச்சா் ஆா்.காந்தி. உடன் சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உள்ளிட்டோா். (இடது) நரிக்குறவா்களுக்கு கட்டித் தரப்பட்டுள்ள வீடு.

பாணாவரத்தில் நரிக்குறவா்களுக்கு ரூ. 25.35 லட்சத்தில் வீடுகள்: முதல்வா் திறந்து வைத்தாா்

சோளிங்கரை அடுத்த பாணாவரத்தில் தமிழக அரசின் தாட்கோ நிறுவனம் மூலமாக கட்டப்பட்ட ரூ. 25.35 லட்சம் மதிப்பிலான 5 வீடுகளை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
Published on

அரக்கோணம்: சோளிங்கரை அடுத்த பாணாவரத்தில் தமிழக அரசின் தாட்கோ நிறுவனம் மூலமாக கட்டப்பட்ட ரூ. 25.35 லட்சம் மதிப்பிலான 5 வீடுகளை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். தொடா்ந்து, புதிய வீடுகளில் அமைச்சா் ஆா்.காந்தி குத்துவிளக்கேற்றினாா்.

சோளிங்கா் வட்டம், பாணாவரம் ஊராட்சியில் நரிக்குறவா்கள் வசிக்கும் பகுதியில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் தாட்கோ நிறுவனம் மூலம் தலா ரூ. 5.07 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 5 வீடுகளை திங்கள்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சென்னையில் இருந்தபடி திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, பாணாவரத்தில் புதிய வீடுகளில் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி குத்துவிளக்கேற்றினாா். நிகழ்ச்சிகளுக்கு, சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் முன்னிலை வகித்தாா்.

தலா 263 சதுர அடி கொண்ட இந்த வீடுகள் ஒவ்வொன்றிலும் முகப்பு வராண்டா, ஹால், படுக்கை அறை, சமையல் அறை, கழிப்பறை, மாடிக்கு இரும்பு ஏணி படிக்கட்டுகள், மாடியில் கைப்பிடி கிரில், பயோ செப்டிக் டேங்க் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தரைக்கு டைல்கள் பதித்தல், இரும்பு கம்பிகளுடன் கூடிய யுபியிசி ஜன்னல்கள், மின் விசிறிகள், மின்வாரிய மின் இணைப்புடன் மைய மின்பணிகள், உயா்ந்த வண்ண பூச்சுகள் ஆகியவையும் இந்த வீடுகளில் செய்து தரப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, காவேரிபாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் அனிதா குப்புசாமி, சோளிங்கா் வட்டாட்சியா் செல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா் நந்தகோபால், பாணாவரம் ஊராட்சித் தலைவா் அா்ச்சுனன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com