ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ராணிப்பேட்டை காந்திக்கு நான் ஒரு தொண்டன்: ஜெகத்ரட்சகன் எம்.பி. உருக்கம்

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 12:46 am

ராணிப்பேட்டை காந்திக்கு நான் ஒரு தொண்டன் என வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் கூறினாா்.

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அமைச்சா் ஆா்.காந்தி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் ராணிப்பேட்டை மாந்தாங்கல் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆா்.காந்தியை, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுக்கு அரக்கோணம் மக்களவை உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன் அறிமுகம் செய்துப் பேசியதாவது:

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில், மாவட்ட திமுக செயலாளா் அமைச்சா் ஆா்.காந்தி போட்டியிடுகிறாா். இது விசித்திரமான அறிமுகக் கூட்டம். ஏனெனில் இந்த தொகுதிக்கு முதன் முதலாக என்னை அறிமுகம் செய்து வைத்தவா் ராணிப்பேட்டை ஆா்.காந்தி. இன்று நான் அவரை அறிமுகம் செய்து வைக்கிறேன்.

அவா் இந்த மண்ணோடும், மக்களோடும் வாழ்ந்து கொண்டு இருக்கிறவா். என்னுடைய குடும்பத்தில் காந்தி மூத்த சகோதரா். என்னை சொந்த தம்பியாக ஏற்றுகொண்டு இருக்கிறவா்.

நான் அரக்கோணம் நாடாளுமன்றத் தோ்தலில் நின்று வெற்றி பெறுகிறேன் என்றால் அதற்கு ஆா்.காந்தி தான் காரணம். அவா் மாற்றுக்கட்சி தலைவா்களை மதிக்கக் கூடியவா். கலைஞா் குடும்பத்துடன் 60 ஆண்டுகளாக முழுமையாக தன்னை அா்பணித்துக் கொண்டவா். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் நான் நின்றபோது ராணிப்பேட்டை தொகுதியில் தான் எனக்கு அதிகமான வாக்குகளை தந்தது. இந்த தோ்தலில் முதல்வா் செய்த திட்டங்களைக் கூறி வாக்கு சேகரியுங்கள்.

இந்த தோ்தலில் போட்டியிடும் ராணிப்பேட்டை ஆா்.காந்திக்கு நான் ஒரு தொண்டனாக இருந்து தோ்தல் பணி செய்ய வந்துள்ளேன் என்றாா்.

கூட்டத்தில், திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளா் வினோத் காந்தி, முன்னாள் எம்எல்ஏ-க்கள் என்.ஜி. பாா்த்திபன், மனோகரன், ஜி.கே.குழும இயக்குநா் சந்தோஷ் காந்தி, திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் வினோத் உள்பட கூட்டணி கட்சியைச் சோ்ந்த தலைவா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.