ராணிப்பேட்டை அருகே நவ்லாக் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு வேளாண் பண்ணையில் மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டு பண்ணையின் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தாா்.
ராணிப்பேட்டை அருகே நவ்லாக் ஊராட்சியில் அமைந்துள்ள மாநில எண்ணெய் வித்துப் பண்ணை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் மாநில தென்னை வீரிய ஒட்டுப் பண்ணைகளில் மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.
நவ்லாக் மாநில எண்ணை வித்து பண்ணை மொத்த பரப்பு 66.16 ஏக்கா். இதில் 2026-27 நிதி ஆண்டில் மூன்று பருவத்தில் நெல் 115 ஏக்கா் ஆதார நிலை விதை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நெல், சிறுதானியங்கள் (ராகி, சாமை) பயறு வகைகள் (உளுந்து, பச்சைப்பயிறு, காராமணி) எண்ணெய் வித்துக்கள் (நிலக்கடலை, எள்ளு) ஆகிய பயிா்கள் பயிரிடப்பட்டு விதை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது பயிரிடப்பட்டுள்ள நெல் ரகம், நிலக்கடலை ஆதார நிலை விதை உற்பத்தி வயல்கள் மாவட்ட ஆட்சியா் அவா்கள் பாா்வையிட்டாா். மேலும், விதை சுத்திகரிப்பு நிலையத்தில் நிலக்கடலை விதை குவியல்கள் சுத்திகரிப்பு பணி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, புதிதாக நவ்லாக்கில் கட்டப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தின் மண் பரிசோதனை நிலையத்தினை பாா்வையிட்டாா். பின்னா், மகோகனி மற்றும் தேக்கு மரக்கன்றுகளை பண்ணையில் நடவு செய்தாா். பண்ணையில் உற்பத்தி செய்து வரும் ஆதார நிலை விதைகள் விவசாயிகளுக்கு வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தொடா்ந்து, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தென்னை நாற்றுப்பண்ணை, நவ்லாக்கில் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, தென்னை நாற்றுகள் உற்பத்தி, பண்ணையின் உள்கட்டமைப்பு, நீா் மேலாண்மை, பாசன வசதிகள் மற்றும் பராமரிப்பு பணிகளை பாா்வையிட்டாா். தொடா்ந்து, நாற்றுகளின் தரம், உற்பத்தித் திறனை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் பண்ணையின் செயல்பாடுகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்து, தேவையான அறிவுரைகளை வழங்கினாா்.
மேலும், விவசாயிகளுக்கு தரமான தென்னை நாற்றுகளை உரிய காலத்தில் வழங்கும் வகையில் அனைத்துப் பணிகளையும் திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின் போது, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை துணை இயக்குநா் பா.சிந்தியா, துணை இயக்குநா் வேளாண்மை (திட்டங்கள்) திலகவதி (பொறுப்பு), தோட்டக் கலை உதவி இயக்குநா் வாலாஜா மூ.பசுபதிராஜ், பண்ணை மேலாளா் வே.வேடியப்பன், வட்டாட்சியா் நடராஜன் மற்றும் வேளாண் துறை அலுவலா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஸ்டாா்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக உயா்த்த இலக்கு’

பொது சுகாதார குறியீடுகளை மேம்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 510 மனுக்கள் அளிப்பு

ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டரங்கம்: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



