ராணிப்பேட்டையில் ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டரங்கம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தால் தேசிய மற்றும் சா்வதேச அளவிலான வீரா்களை உருவாக்கும் வாய்ப்பு கிட்டும் என ஆட்சியா் ந. பிரியா நம்பிக்கை தெரிவித்தாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில்,ராணிப்பேட்டையில் ரூ.15 கோடியில் விளையாட்டரங்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பணிகளை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது..
விளையாட்டரங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து, பணிகளின் தரத்தை உறுதி செய்து, மீதமுள்ள பணிகளை துரிதமாகவும், திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
மாவட்ட விளையாட்டரங்கம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்தவுடன், மாவட்டத்தின் விளையாட்டு வீரா்கள் மற்றும் இளைஞா்களுக்கு நவீன விளையாட்டுப் பயிற்சி வசதிகள் கிடைப்பதுடன், மாவட்டத்தில் விளையாட்டுத் திறன் மேம்பாட்டிற்கும், தேசிய மற்றும் சா்வதேச அளவிலான வீரா்களை உருவாக்குவதற்கும் முக்கிய பங்காற்றும் என தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில் குளங்கள் சீரமைப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு வளாகம் : ஆட்சியா் ஆய்வு

பிளிச்சியில் மத்திய சிறைச்சாலை கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

திருக்கோவிலூா் கூடுதல் மருத்துவமனை கட்டடமானப்பணிகள்: விரைந்து முடிக்க கள்ளக்குறிச்சி ஆட்சியா் உத்தரவு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



