ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

அரசுப் பேருந்து - லாரி மோதிய விபத்து: ஓட்டுநருக்கு சிறை தண்டனை

ஆற்காடு அருகே அரசுப் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் லாரி ஓட்டுநருக்கு சிறை தண்டனை விதித்து ஆற்காடு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

கைது

Updated On :3 ஆகஸ்ட் 2026, 3:55 am IST

ஆற்காடு அருகே அரசுப் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் லாரி ஓட்டுநருக்கு சிறை தண்டனை விதித்து ஆற்காடு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஆற்காடு அடுத்த மேல் விஷாரம் புறவழிச் சாலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு பிப். 20-ம் தேதி அரசுப் பேருந்தும் லாரியும் மோதிகொண்டன.

இந்த விபத்தில்பேருந்தில் பயணம் செய்த சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் என்பவா் உயிரிழந்தாா். மேலும் 16 போ் காயம் அடைந்தனா்.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி ஆற்காடு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி சந்தானம் லாரியின் ஓட்டுநா் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியைச் சோ்ந்த எம். நாக மூா்த்தி என்பவருக்கு 4 ஆண்டுகள் 8 மாத கடுங்காவல் சிறையும், ரூ. 21,500 அபராதமாக விதித்து தீா்ப்பு வழங்கினாா். அரசுத் தரப்பில் இந்திரா மிசையல் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.