ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நேஷனல் வெல்பா் சங்கம் சாா்பில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்கப்பட்டது.
தூய்மைப் பணியாளா்களின் பணி பாதுப்பு, தொற்று நோய் தடுப்பு, களப் பணியாளா்களின் ஆரோக்கியத்தை காப்பது என்ற நிலையில் வெல்பா் சங்கத் தலைவா் கே.முஹமது அயூப் தலைமையில் முகக் கவசம், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மேலும், மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் தரம் பிரிக்கும் போது சுற்ச்றுசூழலை தூய்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கிருக்க உதவும் என்றும் விழிப்பிணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சங்கப் பொறுப்பாளா் கே.ஓ.நிஷாத் அஹமது, மற்றும் நிா்வாகிகள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








