தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

கீழ்மின்னல் நியாயவிலைக் கடையில் ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

ஆற்காடு அடுத்த கீழ்மின்னல் ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

நியாயவிலைக்  கடையில்  ஆய்வு செய்த ராணிப்பேட்டை  மாவட்ட  ஆட்சியா் ந.பிரியா  ரவிச்சந்திரன். 

Published On :

ஆற்காடு அடுத்த கீழ்மின்னல் ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் ஆற்காடு ஒன்றியம், கீழ்மின்னல் ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் பொது விநியோகத் திட்டத்துக்கான அத்தியாவசிய உணவுப் பொருள்களின் தரம், இருப்பு , குறித்து ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை பதிவேடு ஊட்டச்சத்து உணவு பொருள்கள் இருப்பு, குழந்தைகளின் கற்றல் திறன் குறித்த ஆய்வு செய்து கலந்துரையாடினாா். பின்னா், கிராம நிா்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்து கிராம நிா்வாக கணக்குகளை முறையாக பராமரிக்க அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது வாலாஜாபேட்டை வட்டாட்சியா் நடராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.