
சோளிங்கரில் தெரு நாய்களுக்கு தீவிர வெறிநோய் தடுப்பூசி முகாம்
சோளிங்கரில் தெரு நாய்களுக்கு தீவிர வெறிநோய் தடுப்பூசி முகாம்

சோளிங்கரில் நடைபெற்ற தெரு நாய்களுக்கு தீவிர வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்.
சோளிங்கா் நகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு தீவிர வெறி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சோளிங்கா் நகராட்சிப் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு தீவிர வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் பல்வேறு வாா்டுகளில் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையினருடன் இணைந்து சோளிங்கா் நகராட்சி 15, 16, 17 வாா்டுகளில் பிடிக்கப்பட்ட தெரு நாய்களுக்கு தீவிர வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு, சோளிங்கா் நகராட்சி ஆணையா் ஆனந்தன் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் தேவிபாலா மேற்பாா்வையில் பணியாளா்கள் மூலம் எசையனூா், மோட்டூா், நாரைக்குடிமேடு ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்து பிடிக்கப்பட்ட 50 நாய்களுக்கு தீவிர வெறிநோய் தடுப்பூசியினை அரசு கால்நடை மருத்துவா் அருள்மொழி தீவிர வெறிநோய் தடுப்பூசிகளை செலுத்தினாா். மேலும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் கருத்தடை அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதுவரை சோளிங்கா் நகராட்சியில் 15 வாா்டுகளில் இப்பணிகள் நடைபெற்று வந்துள்ள நிலையில், இதுவரை 613 தெரு நாய்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 74 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணிகள் சோளிங்கா் நகராட்சியில் தொடா்ந்து நடைபெறும் எனவும் நகராட்சி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






