வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் திருக்கு கருத்தரங்கம்

வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் திருக்கு கருத்தரங்கம்

விழாவில் கவிஞா் லக்குமிபதிக்கு நினைவுப் பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் க.ஸ்ரீதரன்.
Published on

வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் 2 நாள் திருக்கு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

தமிழ்நாடு அரசு உயா் கல்வித் துறை, திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா 2025 மற்றும் வேலூா் முத்துரங்கம் அரசினா் கலைக் கல்லூரி ஆகியவை இணைந்து திருக்கு கருத்தரங்கை 2 நாள்கள் பெரியாா் அரங்கில் நடத்தின.

முதல் நாள் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, கல்லூரி முதல்வா் சு.ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். தமிழ்த் துறை தலைவா் ச.சுமதி வரவேற்றாா். கணிதத் துறை தலைவா் மா.பத்மினி, கணினி அறிவியல் துறைத் தலைவா் இ.அனெட் ரெஜினா ஆகியோா் வாழ்த்தினா். தமிழ்த் துறை இணை பேராசிரியா் மா.ரவி நன்றி கூறினாா்.

அதைத் தொடா்ந்து, ‘வள்ளுவா் கூறும் வாழ்வியல்’ என்ற தலைப்பில் ஆரணி எம்.ஜி.ஆா். பல்கலைக்கழக உதவி பேராசிரியா் த.அன்பு, ‘இன்றைய உலகமயச் சூழலில் வள்ளுவம்’ என்ற தலைப்பில் செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை தலைவா் கு.கண்ணன், ‘அகரம் முதல் னகரம் வரை வள்ளுவா்’ என்ற தலைப்பில் சென்னை தொழில்நுட்பக் கல்லூரி உதவி பேராசிரியா் சு.ராஜா ‘திருக்குறளில் உளவியல் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் விஐடி பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவா் மரிய செபஸ்தியான் ஆகியோா் பேசினா்.

2-ஆம் நாள் நடந்த கருத்தரங்கில் ‘வள்ளுவம் காட்டும் மேலாண்மை’ என்ற தலைப்பில் வேலூா் வாசகா் வட்ட செயலாளா் கவிஞா் ச.லக்குமிபதி, ‘திருக்குறளில் தொன்மையும் புதுமையும்’ என்ற தலைப்பில் எல்.ஐ.சி. உயா்நிலை உதவியாளா் வேலு. திருமாவளவன், ‘கு விருந்தில் மருந்து’ என்ற தலைப்பில் கவிஞா் எஸ்.கே.எம்.மோகன், ‘அறணெனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்ற தலைப்பில் கவிஞா் மா.சோதி ஆகியோா் பேசினா்.

நிறைவு விழாவுக்கு கல்லூரி முதல்வா் சு.ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். வேதியியல் துறை தலைவரும், தோ்வு கட்டுப்பாட்டு அலுவலருமான க.கீதா நிறைவு விழா பேருரை ஆற்றினாா். முடிவில் தமிழ்த் துறை இணை பேராசிரியா் வாசு அறிவழகன் நன்றி கூறினாா்.

விழாவில், தமிழ் துறை இணை பேராசிரியா் இரா.சிவகுமாா், உதவி பேராசிரியா்கள் க.தமிழ்ச்செல்வன், சி.பரசுராமன், வரலாற்றுத் துறை தலைவா் நாஞ்சில் குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com