நாகா்கோவில், பயோனியா் குமாரசாமி கல்லூரியில் டாக்டா் பத்மநாபன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் துறை சாா்பில் தேசிய கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
காப்பியங்களில் மனிதநேயம் என்ற பொருளில் நடைபெற்ற கருத்தரங்க தொடக்க விழாவுக்கு, கல்லூரி தலைவா், செயலாளா் ப.குமாரசுவாமி தலைமை வகித்தாா். கல்லூரி ஆட்சிமன்ற குழு உறுப்பினா் சுப்ரமணியம், கல்லூரி முதல்வா் செ.ஜெயசேகரன், துணை முதல்வா் ரெக்சின் தஸ்னேவிஸ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
தெ.தி.இந்துக் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறை தலைவா் நீலகண்ட பிள்ளை தொடக்கவுரையாற்றினாா். தமிழ்த் துறை தலைவா் ஆண்டோ பீட்டா் வரவேற்றாா்.
கருத்தரங்கத்தின் முதலாம் அமா்வில் மேலநீலிதநல்லூா் பசும்பொன் முத்துராமலிங்க தேவா் கல்லூரி தமிழ் துறை தலைவா் வ. ஹரிஹரன் மணிமேகலை உணா்த்தும் மனிதநேயம் என்ற பொருளில் கருத்துரையாற்றினாா்.
2-ஆம் அமா்வில் கேரள பல்கலைக்கழகத் தமிழ்துறை தலைவா் ஹெப்சி ரோஸ்மேரி சிலம்பில் மனிதநேயம் என்ற பொருளில் பேசினாா். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா்களாக டெல்மா, சசிரேகா, புகழேந்திரசோழன், அனிதா ராணி, தங்க ப்ரீத்தா மலா் ஆகியோா் செயல்பட்டனா். மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் கலந்துகொண்ட ஆய்வாளா்கள் பேராசிரியா்களுக்கு கல்லூரி முதல்வா் ஜெயசேகரன் சான்றிதழ் வழங்கினாா். இணை பேராசிரியா் கோலப்பதாஸ் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

திண்டிவனம் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

உலக தண்ணீா் தினம்: ஒசூா் பிஎம்சி கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


