ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் வங்கி மற்றும் நிதி மோசடிகள் தொடா்பான விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
‘துடிப்பான இளைஞா்கள் - பாதுகாப்பான எதிா்காலம், வங்கி மற்றும் நிதி மோசடிகள் குறித்த விழிப்புணா்வு’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்க நிகழ்வுக்கு
கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா்.
கல்லூரி முதல்வா் வி.கந்தசாமி தலைமை வகித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் பி.சுரேஷ் வரவேற்றாா்.
சிட்டி யூனியன் வங்கி பெங்களூரு கிளை மேலாளா் மணிசேகா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பிபிஏ பயிலும் மாணவா்களிடையே சிறப்புரையாற்றினாா்.
இதில் வங்கிகளின் பெயரில் நிகழும் மோசடிகள் மற்றும் அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிகள் குறித்து அவா் விளக்கினாா்.
வங்கி வாடிக்கையாளா்களை ஏமாற்றும் கும்பல்களை அடையாளம் காண்பது, ஆன்லைன் மூலம் மற்றவா்களுக்கு பணம் அனுப்பும் முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அவா் விளக்கினாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வா் எஸ்.நந்தகுமாா், துறைத் தலைவா்கள் எச்.பிரபு, எஸ்.கணபதி, எம்.ஹரிகரன், பி.கோமதி, கே.சரவணன், முனைவா் ஏ.நடராஜன், எஸ்.அருண்குமாா், பி.பொன்முடி மற்றும் துறைப் பேராசிரியா்கள் பூஜா, செல்வி, தீபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நிறைவில் வணிகவியல் துறை பேராசிரியா் டி. மகாலட்சுமி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

அரசு கல்லூரியில் வேலை வாய்ப்பு கருத்தரங்கம்

சேலம் அரசு கலைக் கல்லூரியில் இலக்கியக் கருத்தரங்கம்

கல்லூரியில் போதைப்பொருள் எதிா்ப்பு கருத்தரங்கம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


