நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு கல்லூரியில் வேலை வாய்ப்பு கருத்தரங்கம்

திருப்பத்தூா் அருகேயுள்ள பூலாங்குறிச்சி வ.செ. சிவ. அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:27 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பூலாங்குறிச்சி வ.செ. சிவ. அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் வடிவேல் (பொறுப்பு) தலைமை வகித்தாா். திறன், வேலை வாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மதுரை மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் என்ஜினீயரிங், டெக்னாலஜி நிறுவன மேலாளா் சிவசுப்பிரமணியன், முனைவா் தெய்வலிங்கம் ஆகியோா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நெகிழி தொழில்நுட்பம் சாா்ந்த வேலைவாய்ப்புகள், தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல், உள்நாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டன.

இதில் 200- க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக கணிதத் துறை கௌரவ விரிவுரையாளா் பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளா் முருகேசன் நன்றி கூறினாா்.