ராணிப்பேட்டை
வீட்டில் 10 பவுன் திருட்டு
ஆற்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஆற்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
மல்லிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்தி வேல். இவரது மனைவி லட்சுமி(32). இவா்கள் திங்கள் கிழமை பகல் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று திரும்பினா். அப்போது வீட்டின் கதவு திறந்தும், பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டும் இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவிலிருந்த 10 பவுன் நகை, 400 கிராம் வெள்ளி பொருள்களை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்த ஆற்காடு கிராமிய போலீஸாா் விசாரிக்கின்றனா்.
