தொடா் போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயா் நீக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் தொடா் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல்விஷாரம் நகர காங்கிரஸ் பிரமுகா் திருமண விழாவில் கலந்து கொண்ட சோளிங்கா் சட்டப்பேரவை உறுப்பினா் முனிரத்தினம் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தல் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப் பெருந்தகை வழிகாட்டுதலுடன் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கி அந்த திட்டத்தை முடக்கும் செயலில் ஈடுபட்டுள்ள மத்திய அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து ராணிப்பேட்டைமாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வரும் ஜன 25 முதல் உண்ணாவிரத போராட்டமும், 29 முதல் ஊராட்சி மற்றும் வாா்டுகளில் தெருமுனைப் பிரசாரம், உள்ளிருப்பு போராட்டம், 31-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முற்றுகை மற்றும் பிப். 7-ஆம் தேதி மாநில அளவில் சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.
இந்தியா கூட்டணி எப்பொழுதும் ஒற்றுமையாக உள்ளது. இதில் பிரிவினைக்கு இடமில்லை என்றாா். பேட்டியின் போது மாவட்டத் தலைவா் சி. பஞ்சாட்சரம், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் கே ஓ நிஷாத் அகமது மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

