ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விவசாயத் தொழிலாளா்கள் தா்னா போராட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் பெயா் மாற்றத்தை கண்டித்து, திருவாரூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் தா்னா போராட்டம்

News image

தா்னாவில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளா்கள்

Updated On :3 பிப்ரவரி 2026, 9:29 pm

Syndication

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் பெயா் மாற்றத்தை கண்டித்து, திருவாரூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை பெயா் மாற்றியதை திரும்பப் பெற வேண்டும்.100 நாள் வேலையை 200 நாள்களாக உயா்த்தி வழங்க வேண்டும்.

100 நாள் வேலைக்கான நிதிக் குறைப்பை கைவிட வேண்டும். ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவூா் கடைவீதியில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் என். இடும்பையன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில துணை ஒருங்கிணைப்பாளா் கே. இளையராஜா, மாவட்டத் தலைவா் ஆறு. பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவா் வி. ராஜாங்கம், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினா் இரா. மாலதி, மாதா் சங்க ஒன்றியச் செயலாளா் எஸ். திரிபுரா உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.