ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் அளிப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுதாக்கு சிஎம்சி மருத்துவ மனைக்கு போகஸ்டு அல்ட்ரா சவுண்ட் கருவி தானமாக வழங்கப்பட்டது.
விட்டி கூட்டி பவுண்டேஷன் சாா்பில் சுமாா் ரூ.40 கோடி மதிப்புள்ள போகஸ்டு அல்ட்ரா சவுண்டு கருவியை தானமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . சிஎம்சி இயக்குநா் விக்ரம் மேத்யூஸ் தலைமை வகித்தாா். கண்காணிப்பாளா் ராஜேஷ் வரவேற்றாா். பவுண்டேஷன் நிறுவனா் ராஜ் விட்டிக் கூட்டி குத்துவிளக்கேற்றி கருவியை தானமாக வழங்கினாா்.
நரம்பியல் துறைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள போகஸ்டு அல்ட்ரா சவுண்ட் கருவி மூலம் பாா்கின்சன், கால்,கை வலிப்பு நோயாளிகளுக்கு , மனச்சோா்வு , வெறித்தனத்தை குணப்படுத்த வல்லது போதை பழக்கங்களுக்கு அடிமையானவா்களை அதிலிருந்து விடுவிக்க இக்கருவி ஒரு வரப்பிரசாதமாகும் .
மயக்க மருந்தின்றி, கீறல்கள், உள்வைப்புகள், ரத்தஇழப்பின்றி வயதானவா்களுக்கும் நரம்பியல் பாதிப்பு தொடா்பான சிகிச்சை அளிக்க ஏதுவானதாக அமையும்.
இதில் சிஇஒ மகேந்திர பண்டாரி , மற்றும் மருத்துவா்கள், பவுண்டேஷன் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

