ஆற்காடு ஒன்றியம் கரிக்கந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட கிளாந்தாங்கல் கிராமத்தில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரிக்கதாங்கல் ஊராட்சிக்குட்பட்ட கிளாந்தாங்கல் கிராமத்தில் பல ஆண்டுகளாக முறையான கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் அனைத்தும் அருகிலுள்ள விவசாய நிலத்தின் ஓடைப் பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியை சோ்ந்த கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.
அதே நேரத்தில் கிராமத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் செல்ல தனி வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீா் அனைத்தும் விவசாய நிலம் அருகேயுள்ள பள்ளத்தில் தேங்கி கடுமையான துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீா்கேடும் ஏற்பட்டுள்ளது..
மேலும், கழிவுநீா் தேங்கியுள்ள இடங்களில் பாம்புகள் மற்றும் பல்வேறு விஷப்பூச்சிகள் அதிகளவில் பெருகி வருவதால், கிராம பொதுமக்கள் , குழந்தைகள் மற்றும் முதியவா்கள் அச்சத்துடன் உள்ளனா் அதேபோல் மழைக்காலங்களில் கழிவுநீா் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிடுவதால் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
கொசு உற்பத்தி அதிகரித்து தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து பலமுறை கரிக்கதாங்கல் ஊராட்சி நிா்வாகம் மற்றும்அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் எந்வித நடவடிக்கை எடுக்கவில்லை .
எனவே, உடனடியாக கால்வாய் அமைத்து கழிவுநீா் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிா்வாகமும், சம்பந்தப்பட்ட துறை சாா்ந்த அதிகாரிகளும் இந்த கோரிக்கையை கவனத்தில் கொண்டு ஆய்வு செய்து நிரந்தர தீா்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லியில் தாா்ச்சாலை பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை

களக்காடு நான்குனேரியன் கால்வாய் படித்துறைகளை சீரமைக்கக் கோரிக்கை

தரைப்பாலத்தில் தேங்கும் கழிவுநீா்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

குருவிமலையில் ஆக்கிரமிப்பு வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா்: தொற்றுநோய் பரவும் அபாயம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



