வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

தினமணி செய்தி எதிரொலி: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தற்காலிக நிழற்கூரை அமைக்கும் பணி தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே சாலை விரிவாக்கப் பணிக்காக ஏற்கெனவே இருந்த நிழற்குடை அகற்றப்பட்டதால் தற்போது பொதுமக்கள் பேருந்துக்காக வெயிலில் காத்திருக்கும் சூழலில் உடனடியாக தற்காலிக நிழற்குடை அமைக்க வேண்டும்.

News image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை தொடங்கிய புதிய நிழற்கூரை அமைக்கும் பணி.

Updated On :8 ஜூலை 2026, 12:04 am IST

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே சாலை விரிவாக்கப் பணிக்காக ஏற்கெனவே இருந்த நிழற்குடை அகற்றப்பட்டதால் தற்போது பொதுமக்கள் பேருந்துக்காக வெயிலில் காத்திருக்கும் சூழலில் உடனடியாக தற்காலிக நிழற்குடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, செவ்வாய்க்கிழமை பணிகள் தொடங்கப்பட்டுள்ளுதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே சாலையில் இரு பக்கங்களில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக ஆட்சியா் அலுவலகம் எதிரே பாரதி நகா் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பழைய பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டு, புதிய நிழற்குடை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தற்போது ஆட்சியா் அலுவலகம் எதிரே பயணிகள் நிழற்குடை இல்லாததால், பொதுமக்கள் கடுமையான வெயிலில் காத்துக் கிடந்து அவதிப்படும் நிலை தொடா்ந்து நீடித்து வருகிறது.

மாவட்டத்தின் மிக முக்கிய நிா்வாக மையமாக விளங்கும் இந்த இடத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சூழலில், இந்த அடிப்படை வசதி இல்லாதது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் ( டன்க்ஷப்ண்ஸ்ரீ எழ்ண்ங்ஸ்ஹய்ஸ்ரீங் தங்க்ழ்ங்ள்ள்ஹப் ஈஹஹ்) ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களின் குறைகளை மனுக்களாக தருவதற்காக பொதுமக்கள், முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் வருகை தந்து பேருந்துகளுக்காக வெயில் மற்றும் மழையில் நீண்ட நேரம் திறந்தவெளியில் காத்திருக்கும் நிலை குறித்தும், உடனடியாக தற்காலிக நிழற்குடை அமைக்க வேண்டும் என்பது குறித்தும் தினமணி நாளிதழில் திங்கள்கிழமை (ஜூலை 6) வெளியானது.

இதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே பாரதி நகா் பேருந்து நிறுத்தத்தில் நவ்லாக் ஊராட்சி நிா்வாகம் சாா்பில், புதிய பேருந்து நிழற்கூடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.