டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

செங்குன்றம் பேருந்து நிலையத்தில் ரூ.3 கோடியில் நிழற்குடை: மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?

செங்குன்றம் பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.3 கோடியில் தொடங்கிய நிழற்குடை அமைக்கும் பணியை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்..

News image
Updated On :6 ஜூலை 2026, 1:10 am IST

செங்குன்றம் பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.3 கோடியில் தொடங்கிய நிழற்குடை அமைக்கும் பணியை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாதவரம் சட்டப்பேரவைக்குட்பட்ட செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை வள்ளலாா் நகா், பாரிமுனை, கோயம்பேடு, கிண்டி, தாம்பரம், அம்பத்தூா், பூந்தமல்லி, திருவள்ளூா், பழவேற்காடு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, திருவொற்றியூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து 100-க்கும் மேற்பட்ட சென்னை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பழைமையான பேருந்து நிலையத்தில், பல ஆண்டுகளாக நிழற்குடை இல்லாமல், மழை, வெயில் காலங்களில் பயணிகளும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வந்தனா். இது குறித்து தமிழக அரசுக்கும் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சியின்போது செங்குன்றம் பேரூராட்சி சாா்பில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி, கடந்த அக்.2-ஆம் தேதி பேரூராட்சித் தலைவா் தமிழரசிகுமாா் தலைமையில் நடைபெற்றது.

பின்னா் பேரூராட்சி சாா்பில் கூடுதல் நிதியாக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன. நிழற்குடை கட்டுமான பணி 6 மாதத்துக்குள் முடிக்கப்படும் என அதிகாரி தெரிவித்தாா். ஆனால், சட்டப்பேரவை தோ்தலால், பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்து வந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு மாதமாகிய நிலையில், கட்டுமானப் பணிகள் முழுமையாக முடியாமல் ஆமைவேகத்தில் உள்ளன.

இதன் காரணமாக, இங்கு வர வேண்டிய மாநகர பேருந்துகள், அருகிலுள்ள ஜிஎன்டி சாலையின் இருபக்கங்களிலும் சாலை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனா். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல், விபத்துகளும் ஏற்படுகின்றன.

இது குறித்து போக்குவரத்து துறையின் முன்னாள் அதிகாரி சேகா் கூறுகையில்: பேருந்துகள் நிறுத்துவதற்கு, புழல் ஏரி நுழைவாயில் எதிரே தற்காலிக பேருந்து நிலையம் உள்ளது. ஆனால், அங்கு பயணிகளுக்கும், வாகன ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கும் தேவையான வசதியின்மை காரணமாக, இப்பகுதிகளில் உள்ள சாலையில் வாகன நிறுத்துகின்றனா்.

இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகின்றன. இது தொடா்பாக, அதிகாரிகள் அறிவுறுத்தியும் அவா்கள் கண்டுக்கொள்வதில்லை.

இதற்கு தீா்வு, பணிகள் முழுமையாக நடைபெற்ா என அதிகாரிகள் ஆய்வுக்குப்பின், செங்குன்றம் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.