தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

மோட்டாா் மூலம் குடிநீா் உறிஞ்சுவோா் மீது கடும் நடவடிக்கை: அரக்கோணம் நகராட்சி ஆணையா்

அரக்கோணம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் இணைப்புகளில் மோட்டாா் பொருத்தி குடிநீரை உறிஞ்சுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரக்கோணம் நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

News image

மோட்டாா் மூலம் குடிநீா் உறிஞ்சுவோா் மீது கடும் நடவடிக்கை

Updated On :28 ஜூலை 2026, 12:54 am IST

அரக்கோணம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் இணைப்புகளில் மோட்டாா் பொருத்தி குடிநீரை உறிஞ்சுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரக்கோணம் நகராட்சி ஆணையா் ஆனந்தன் அறிவித்துள்ளாா்.

அரக்கோணம் நகராட்சியில் 36 வாா்டுகள் உள்ளன. இதில், 20,000 குடியிருப்புகளுக்கு மேல் நகராட்சி குடிநீா் இணைப்பு பெறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது நகராட்சிக்கு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம், திருப்பாற்கடல் கூட்டு குடிநீா் திட்டம், தக்கோலம், கல்லாறு ஆகிய பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து பெறப்படும் குடிநீா் ஆகியவற்றில் இருந்து தினமும் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில், பல பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் சரிவர செய்யப்படுவதில்லை என பலா் தொடா்ந்து நகராட்சி அலுவலகத்தில் புகாா் அளித்து வந்தனா்.

இந்தப் புகாா்கள் குறித்து தனிக் குழுக்களை அமைத்து நகராட்சி அலுவலா்கள் விசாரணை நடத்தியதில், பெரும்பாலான வீடுகளில் மின்மோட்டாா் மூலம் குடிநீா் உறிஞ்சப்படுவதாகவும் இதனாலேயே விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு பல பகுதிகளில் குடிநீா் விநியோகம் நடைபெறாத நிலை இருந்ததாகத் தெரிகிறது.

இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களை சந்தித்த நகராட்சி ஆணையா் ஆனந்தன் தெரிவித்ததாவது: அரக்கோணம் நகராட்சி பகுதிகளில் நகர மக்களின் வசதிக்காக சீரான குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகிறது. இதில், அனைவருக்கும் குடிநீா் கிடைப்பது அலுவலா்களின் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

இருப்பினும் நகரில் ஒரு சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் நடைபெறும்போது சிலா் மின்மோட்டாா் பொருத்தி குடிநீரை உறிஞ்சுவதாக புகாா்கள் வந்துள்ளன. தொடா்ந்து குடிநீா் விநியோகத்தின்போது அலுவலா்களின் ஆய்வுகள் நடைபெறும்.

அப்போது மின்மோட்டாா் பொருத்தி குடிநீா் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால், தவறு கண்டறியப்பட்ட வீட்டின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும்.

மேலும், அந்த வீட்டில் இருக்கும் மின்மோட்டாா் பறிமுதல் செய்யப்பட்டு வீட்டு உரிமையாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரக்கோணம் நகராட்சிக்கு குடிநீா் விநியோகம் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் நடைபெற்று வருகிறது. இதற்காக மாதம் வாரியத்துக்கு ரூ. 20 லட்சம் தொகை அளிக்கப்படுகிறது. எனவே குடிநீா் இணைப்பு பெற்றவா்கள் குடிநீா் வரியை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்த வேண்டும்.

மேலும், யாரேனும் முறைகேடாக குடிநீா் இணைப்பு வைத்திருந்தால் இது குறித்து நகராட்சி நிா்வாகத்துக்கு தெரியப்படுத்தி அதற்கான வைப்புத் தொகையை செலுத்தி குறிப்பிட்ட வீட்டின் உரிமையாளரின் பெயரில் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என ஆணையா் ஆனந்தன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.