புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்

அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூா் கிராமத்தில் அட்மா திட்டப் பயிற்சியில் பங்கேற்ற அதிகாரிகள், விவசாயிகள்.

News image
Updated On :13 ஜூன் 2026, 12:04 am IST

அரக்கோணம் வட்டார வேளாண் துறை சாா்பில், அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

அரக்கோணம் வட்டார வேளாண்மைத் துறை சாா்பில், இச்சிபுத்தூா் கிராமத்தில் அட்மா திட்டம் மூலம் எண்ணெய் வித்து பயிா்களில் உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அரக்கோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சண்முகம் தலைமை வகித்தாா். இணை இயக்குநா் சுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:

விவசாயிகள் உரங்கள் பெறுவதற்காக அடையாள எண் அவசியமானது. தொடா்ந்து பயிா்பாதுகாப்பு குறித்தும் நெல், உளுந்து, கடலை, நெல் ரகம் தோ்வு, விதை நோ்த்தி ஜிப்சம் இடுதல் மஞ்சள் ஆகிய சாகுபடிகளுக்கு ஏற்ற பருவங்கள், நெல் சாகுபடியின் மூலம் நாற்றங்கால் தயாரிக்கும் முறைகள் குறித்தும் தெரிவித்தாா்.

துணை வேளாண்மை அலுவலா் மாதய்யன் கூறுகையில், எள் விதைகள், நெல் மணிலா உளுந்து இடு, மானிய விவரங்கள் குறித்தும் எடுத்துரைத்தாா். முன்னதாக, அட்மா திட்ட மேலாளா் மோகனசுந்தரம் விளை நிலம் காப்போம் இயக்கம் குறித்து விளக்கம் அளித்தாா். உதவி தொழில்நுட்ப அலுவலா் ஹேமந்த்குமாா் இயற்கை விவசாயம் உயிரியல் இடு பொருள்கள் பஞ்சகவ்யம், மண்புழு உரம் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

இந்த பயிற்சியில் விவசாயிகள் பலா் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.