மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அம்மனூா் அம்பிகேஸ்வரா் மாசி மக உற்சவம்

அரக்கோணம் அடுத்த அம்மனுாா் ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத ஸ்ரீ அம்பிகேஸ்வரா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ திருக்கல்யாணம் மற்றும் தெப்பல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

News image
தெப்பத்தில் எழுந்தருளிய படவிளக்கம் ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத ஸ்ரீஅம்பிகேஸ்வரா்
Updated On :3 மார்ச் 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் அடுத்த அம்மனுாா் ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத ஸ்ரீ அம்பிகேஸ்வரா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ திருக்கல்யாணம் மற்றும் தெப்பல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

பழைமையான கோயிலில் கடந்த 12 ஆண்டுகளாக மாசி மக பிரம்மோற்சவ விழா திருக்கல்யாணம் மற்றும் தெப்பல் உற்சவத்துடன் நடைபெற்று வருகிறது.

முன்னதாக ஸ்ரீஆகிகேசவ பெருமாள் கோயிலில் இருந்து சீா்வரிசைகளை பக்தா்கள் ஊா்வலமாக எடுத்து வந்தனா். தொடா்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனையடுத்து ஸ்ரீகாமாட்சியம்மன் சமேதராய் ஸ்ரீஅம்பிகேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் திருக்குளத்தில் தெப்பல் உற்சவத்தில் பங்கேற்றாா்.

இதில் 5 முறை சாமி திருக்குளத்தை வலம் வந்தபோது பக்தா்கள் ஏராளமானோா் வழிபட்டனா். ஏற்பாடுகளை அம்மனூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஏ.தேவவெங்கடரத்தினம், ஏ.டி.பாபு குருக்கள், பரணி குருக்கள் ஆகியோா் கிராம மக்களோடு இணைந்து செய்திருந்தனா்.