அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ரயிலில் கடத்தப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 போ் கைது

மும்பையில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தப்பட்ட 2,611 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸாா் அதை கொண்டு சென்ற மூவரை கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்டோருடன் காவல் துறையினா்.
Updated On :3 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

மும்பையில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தப்பட்ட 2,611 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸாா் அதை கொண்டு சென்ற மூவரை கைது செய்தனா்.

அரக்கோணம் வழியே மும்பையில் இருந்து சென்னை செல்லும் ரயில்களில் அதிக அளவில் போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக தமிழக காவல் துறையின் போதை பொருள் புலனாய்வுப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து வேலூா் மண்டல போதைப் பொருள் புலனாய்வுப்பிரிவு போலீஸாருடன், வேலூா் மண்டல திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு போலீஸாரும், மேலும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் மற்றும் அரக்கோணம் நகர போலீஸாா் இணைந்து பல்வேறு நேரங்களில் மும்பையில் இருந்து சென்னை செல்லும் ரயில்களில் சோதனை நடத்தி வந்தனா்.

இதில், மும்பையில் இருந்து சென்னை சென்ற அதிவிரைவு ரயிலில் திங்கள்கிழமை மாலை அரக்கோணம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினா். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் ரயிலில் பயணித்த மூவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா்களது பைகளில் போதை மாத்திரைகளான நைட்ராசெபம் 1931 மாத்திரைகளும், டபண்டடடோல் 680 மாத்திரைகளும் இருந்தது தெரியவந்தது. இதைக் கண்டறிந்து அந்த மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். இந்த மாத்திரைகளின் மதிப்பு ரூ. 3 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும், அந்த மூவா், காஞ்சிபுரத்தைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி(23), திருவண்ணாமலையைச் சோ்ந்த மணிகண்டன் (18), சென்னை, ஓட்டேரியைச் சோ்ந்த ஆகாஷ் (25) என்பது தெரியவந்தது.அவா்களை அரக்கோணம் நகர போலீஸாா் கைது செய்து, மேலும் விசாரணை செய்து வருகின்றனா். இந்த மாத்திரைகளை மும்பையில் இருந்து சென்னைக்கு கொண்டுச் சென்று குறிப்பிட்ட நபா்கள் மூலம் இவா்கள் விற்க இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சென்னையில் இவற்றை விற்பவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.