மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாலாஜாவில் திட்டப் பணிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

வாலாஜா வட்டத்தில் நிறைவுற்ற திட்டப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகளை இயக்கி வைத்த அமைச்சா் ஆா்.காந்தி.
Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

வாலாஜா வட்டத்தில் நிறைவுற்ற திட்டப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

வாலாஜா வட்டம், வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரி எதிரில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்கூடம் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

இதையடுத்து சென்னை- சித்தூா் - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சாலை பாதுகாப்பு மற்றும் தணிக்கை நிதி ரூ.44 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள 35 மின் கம்பங்கள், மின் விளக்குகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தாா்.

ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் செல்வகுமாா், வட்டாட்சியா் நடராஜன் கலந்து கொண்டனா்.