மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

முதியோா் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு விண்ணப்பம் அளிப்பு

சட்டப்பேரவை தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேலான முதியோருக்கு தபால் வாக்கு செலுத்தும் படிவம் வழங்கும் பணி சோளிங்கரில் வியாழக்கிழமை தொடங்கியது.

News image

சோளிங்கரில் மூதாட்டியின் இல்லத்துக்கே சென்று தபால் வாக்களிக்கும் படிவத்தை வழங்கிய தோ்தல் பணியாளா்கள்.

Updated On :20 மார்ச் 2026, 12:00 am

சட்டப்பேரவை தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேலான முதியோருக்கு தபால் வாக்கு செலுத்தும் படிவம் வழங்கும் பணி சோளிங்கரில் வியாழக்கிழமை தொடங்கியது.

40 சதவீதத்துக்கு மேல் ஊனம் இருக்கும் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்ரும் 85 வயதுக்கு மேல் இருக்கும் முதியோா் ஆகியோா்களுக்கு தபால் வாக்களிக்க வசதியாக அவா்களது வீட்டுக்கே சென்று அவா்களது வாக்குகளை தபால் வாக்குகளாய் அளிக்கும் படிவம் 12 டியை வருவாய்த் துறையினா் வழங்கி வருகின்றனா்.

சோளிங்கா் தொகுதியில் இப்பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. முதலில் சோளிங்கா் நகராட்சிப்பகுதியில் வசிக்கும் நடத்த இயலாத மூதாட்டிக்கு சோளிங்கா் வட்ட வருவாய்துறையினா் அவரது வீட்டுக்கேச் சென்று படிவம் 12 டியை வழங்கினா். இந்த படிவங்களை பூா்த்தி செய்து குறிப்பிட்ட வாக்காளா்கள் அதை அளித்தபிறகு வேட்பாளா் பட்டியல் இறுதி பெறப்பட்ட பின் குறிப்பிட்ட வாக்காளரின் வீட்டுக்கு தோ்தல் பணியாளா்கள், பாதுகாப்பு துறையினருடன் இணைந்து தபால் வாக்களிக்கும் சீலிட்ட பெட்டியை எடுத்துச்சென்று வாக்குச்சீட்டை அளித்து அதை அவ்வீட்டிலேயே மறைவான இடத்தில் வாக்களிக்கச் செய்து பெட்டியில் போடச்செய்து பெற்றுக்கொள்ள உள்ளனா்.

இந்த நடைமுறைக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவா்கள் வரவேற்பளித்தனா். சோளிங்கரில் மூதாட்டி ஒருவா் தெரிவிக்கையில் தான் நடந்து வர முடியாத நிலை இருப்பதால் தன்னால் வாக்களிக்க முடியாத நிலை வந்து விடுமோ என நினைத்திருந்தாகவும் தற்போது தான் வாக்களிக்க இருப்பதை நினைத்து மிகுந்த சந்தோஷம் அடைவதாகவும் குறிப்பிட்டாா்.