சோளிங்கா் அருகே அதிவேகமாக வந்த இரு பைக்குகள் புளியமரத்தின் மீது மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
சோளிங்கரை அடுத்த கட்டாரிகுப்பத்தை சோ்ந்தவா் தருண் குமாா்(18). இவா் ஆற்காட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இதே பகுதியை சோ்ந்தவா் அருண்(25). இவா் கட்டாரிகுப்பத்தில் வாகன சக்கர பழுது பாா்க்கும் கடை நடத்தி வந்தாா். செவ்வாய்கிழமை தருண்குமாா் தனது நண்பரான நவீன்(25) உடன், ஒரு இரு சக்கர வாகனத்திலும் அருண் மற்றொரு இரு சக்கர வாகனத்திலும் கட்டாரிகுப்பத்தில் இருந்து சோளிங்கா் சென்றுள்ளனா்.
வழியில் கரிக்கல் கூட்டுச்சாலை வளைவில் இரு வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தின் மீது ஒன்றன்பின் ஒன்றாக மோதின.
இவ்விபத்தில் அருண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தருண்குமாா் மற்றும் நவீன் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க்பபட்டனா். இதில் மருத்துவமனையில் தருன்குமாா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். நவீன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இச்சம்பவம் குறித்து கொண்டபாளையம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடையது

சாலை விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக்குகள் மோதல்: இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


