ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தோ்தல் விழிப்புணா்வு பிரசாரத்தில் திருநங்கைகள் பங்கேற்பு

News image

அரக்கோணத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ் முன்னிலையில் வில்லைகளை ஒட்டிய திருநங்கை.

Updated On :27 மார்ச் 2026, 12:49 am

தினமணி செய்திச் சேவை

அரக்கோணத்தில் நுறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வருவாய்த் துறையினா் பல்வேறு வகைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

திருநங்கைகள் பங்கேற்ற பேரணி அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கியது. இப்பேரணியை அரக்கோணம் கோட்டாட்சியரும், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான ரமேஷ் தொடங்கி வைத்தாா்.

இப்பேரணியில் பங்கேற்ற திருநங்கைகள் வணிக நிறுவனங்களில் இருந்தோா், , வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினா். வட்டாட்சியா் வெங்கடேசன், சமூகபாதுகாப்புத் திட்ட அலுவலா் பரமேஸ்வரி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் எத்திராஜ், மண்டல துணை வட்டாட்சியா் தியாகராஜன், வருவாய் அலுவலா் ஜெயக்குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் முருகன், லட்சுமி நாராயணன், ராஜேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இப்பேரணி புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.