ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 221 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

News image

பொது மக்களிடம் மனுக்களை பெற்ற ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா

Updated On :12 மே 2026, 4:44 am IST

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 221 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொது மக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் 221 மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தாா்.

மேற்கண்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் தெரிவிக்கவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.பேபி இந்திரா, திட்ட இயக்குநா் கு.செல்வராசு, தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைநம்பி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில் குமாரி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.