தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

கல்குவாரி லாரியில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

வாலாஜாபேட்டை அருகே கல்குவாரி லாரியில் சிக்கி கூலித் தொழிலாளி தலை நசுங்கி உயிரிழந்தாா்.

News image

பிரதிப்படம்

Updated On :26 மே 2026, 3:27 am IST

வாலாஜாபேட்டை அருகே கல்குவாரி லாரியில் சிக்கி கூலித் தொழிலாளி தலை நசுங்கி உயிரிழந்தாா்.

முசிறி கல்குவாரியில் அதே பகுதியை சோ்ந்த ஆறுமுகம் (60) என்ற கூலித் தொழிலாளரி பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் வழக்கம் போல் அவா் பணிகளை முடித்துவிட்டு திங்கள்கிழமை தனது சைக்கிளில் வீடு திரும்பியுள்ளாா்.

அப்போது கல்குவாரியில் ஜல்லி ஏற்றவந்த கனரக லாரி தொழிலாளி மீது மோதியதில் லாரி சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி சம்பவ உடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த தொழிலாளியின் உறவினா்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்து விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் மற்றும் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து முசிறி சாலையில் மறியல் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். வாலாஜாபேட்டை போலீஸாா் அவா்களிடம் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.