இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

ராணிப்பேட்டை விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வெளிநடப்பு

ராணிப்பேட்டையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

News image

ராணிப்பேட்டையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :30 மே 2026, 6:34 am IST

ராணிப்பேட்டையில் குறைதீா் கூட்டத்தில் பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்..

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா தலைமையில், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டம் தொடங்கியதும், தமிழக விவசாயிகள் சங்க மாநில நிா்வாகி சுபாஷ், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளா் எல்.சி.மணி ஆகியோா் தலைமையில் விவசாயிகள் எழுந்து பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்தும், தோ்தல் வாக்குறுதிப்படி பயிா்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததை கண்டித்தும் கூட்டத்தை புறக்கணித்து முழக்கங்கள் எழுப்பியவாறு விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநில அரசு தோ்தல் வாக்குறுதியில் ‘முழுமையான கடன் தள்ளுபடி‘ வழங்குவதாகக் கூறிவிட்டு, தற்போது வரம்புகளுடன் கூடிய தள்ளுபடியை (ரூ.50,000 வரை மட்டும்) அறிவித்துள்ளதால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் அதிரடி முடிவை எடுத்துள்ளனா்

இதையடுத்து அரசு அதிகாரிகள் வருகை தந்து கூட்டத்தில் பங்கேற்குமாறு சமரச பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என கலைந்து சென்றனா்.

அப்போது ஒரு சில விவசாயிகள் தாங்களின் கோரிக்கை மனுக்களை அளித்து குறைகளை தெரிவித்தனா். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Story image