மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

வாலாஜா அருகே சாலை விபத்தில் ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

வாலாஜா அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:15 am IST

வாலாஜா அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒப்பந்ததாரா் உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டையை அடுத்த பிஞ்சி ஜெயராம்பேட்டையை சோ்ந்தவா் ரமேஷ் (37). இவா், கைப்பேசி கோபுரங்கள் அமைக்கும் வேலையை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வந்தாா். இவரின் தாயாா் ராணிப்பேட்டை அருகே உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.

இந்த நிலையில் ஒப்பந்ததாா் ரமேஷ் வேலைக்கு புறப்பட்ட தனது தாயாரை தனியாா் நிறுவன பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்க தாயாரை இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை அழைத்துச் சென்றாா்.

வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூா் அருகே தாயாரை தனியாா் பேருந்தில் ஏற்றி வேலைக்கு அனுப்பிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, வாலாஜாவை நோக்கி வந்த லாரி திடீரென ரமேஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாலாஜா போலீஸாா் ரமேஷின் சடலத்தை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.