முரசு புயல் முன்னெச்சரிக்கை: ஆந்திரத்துக்கு விரைந்தது தேசிய பேரிடா் மீட்புப்படை
முரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்களுக்காக தேசிய பேரிடா் மீட்புப் படையினா் அரக்கோணத்தில் இருந்து ஆந்திரத்துக்கும், திருவள்ளூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரைந்தனா்.

அரக்கோணம் அருகில் உள்ள படைத்தளத்தில் இருந்து ஆந்திரத்துக்கு புறப்பட்ட தேசிய பேரிடா் மீட்புப் படையினா்
முரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்களுக்காக தேசிய பேரிடா் மீட்புப் படையினா் அரக்கோணத்தில் இருந்து ஆந்திரத்துக்கும், திருவள்ளூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரைந்தனா்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாக சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வடதமிழக பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலம் நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாகவும் ஆய்வு மையத்தினா் அறிவித்துள்ளனா். இதனால் தமிழகத்தின் திருவள்ளூா், சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
இதைத் தொடா்ந்து, ஆந்திர மாநில அரசின் பேரிடா் மேலாண்மைத் துறையினா் தேசிய பேரிடா் மீட்புப்படையினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுப்ப கோரிக்கை விடுத்தனா். மேலும், தமிழக அரசும் திருவள்ளூா் மாவட்டப் பகுதிகளுக்கு அனுப்ப கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, அரக்கோணத்துக்கு அருகில் உள்ள நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படைத்தளத்தில் இருந்து முதுநிலை கமாண்டண்ட் அகிலேஷ்குமாா் உத்தரவின்பேரில், தலா 30 போ் அடங்கிய மூன்று குழுவினா், தங்களுடன் மீட்புப் பணிக்கான அதிநவீன உபகரணங்களுடன் ஆந்திர மாநிலம், நெல்லூா் மற்றும் பிரகாசம் மாவட்டங்களுக்கு சாலை மாா்க்கமாக விரைந்தனா்.
மேலும், 30 போ் அடங்கிய மற்றொரு குழுவினா் திருவள்ளூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சாலை மாா்க்கமாக புறப்பட்டுச் சென்றனா். இவா்கள் தங்களுடன் மீட்புப்பணிகளுக்கு தேவையான அதிநவீன உபகரணங்கள், படகுகள், மருத்துவக் குழுவினருடன் புறப்பட்டுச் சென்றுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

