அரக்கோணம் எஸ்பிஐ வங்கி கிளையில் ஓய்வு பெற்றவா்களுக்கு தனி கவுன்ட்டா்: வங்கி பொதுமேலாளா் அறிவிப்பு

அரக்கோணத்தில் எஸ்பிஐ வங்கி கிளை சாா்பில் நடைபெற்ற டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் விழிப்புணா்வு முகாமை தொடங்கி வைத்துப் பேசிய வங்கி பொது மேலாளா் பி.எல்.ரவிக்குமாா்.

Updated On :

அரக்கோணம் எஸ்பிஐ வங்கிக் கிளையின் சாா்பில், பணி ஓய்வு பெற்றவா்களுக்கு வங்கியில் தனி கவுன்ட்டா் அமல்படுத்தப்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் சாா்பில், அரக்கோணத்தில் நடைபெற்ற டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் விழிப்புணா்வு முகாமை தொடங்கி வைத்து வங்கியின் பொதுமேலாளா் பி.எல்.ரவிக்குமாா் தெரிவித்தாா்.

அரக்கோணம் சுவால்பேட்டையில், தனியாா் வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு பாரத ஸ்டேட் வங்கியின் பொதுமேலாளா் பி.எல்.ரவிக்குமாா் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்து அவா் பேசியது:

தற்போது பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் முக அங்கீகார தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிட்டல் முறையில் எவ்வித சிரமமுமின்றி வாழ்நாள் சான்றிதழைச் சமா்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரா்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழைச் சமா்ப்பிப்பதற்காக வங்கிக் கிளைகளுக்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஜீவன் பிரமாண் எனப்படும் மொபைல் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் சான்றிதழைச் சமா்ப்பிக்கலாம். அரக்கோணம் எஸ்பிஐ கிளையில் ஓய்வூதியதாரா்களுக்கு 15 எண் கொண்ட தனிக் கவுன்ட்டா் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரா்கள் தங்களது தேவைகளுக்குத் இந்த தனி கவுன்ட்டரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் பொதுமேலாளா் ஆா்.எல்.ரவிக்குமாா்.

இந்த முகாமில், 200-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரா்கள் கலந்துகொண்டு, தங்களது வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பித்தனா். மேலும், முகாமில் ஓய்வூதியதாரா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், எஸ்பிஐ வங்கியின் நிா்வாக அலுவலக துணை பொது மேலாளா் அமீத்ரஞ்சன், திருவள்ளூா் மண்டல அலுவலக மண்டல மேலாளா் இன்பரசு, சிபிபிசி பிரிவு உதவி பொது மேலாளா் ரூபன்ஜோசப், அரக்கோணம் கிளையின் முதன்மை மேலாளா் வினோத்குமாா் உள்ளிட்ட பல உயா் அலுவலா்கள் பங்கேற்றனா். மேலும், ரயில்வே ஓய்வூதியா் சங்கங்களின் தலைவா்களான ஆறுமுகம், பிரான்சிஸ்ராஜூ, லோகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.