என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

வைக்கோலை வீணாக்காமல் பாதுகாத்து பயன்படுத்துங்கள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வேண்டுகோள்

‘வைக்கோல் என்பது வீண் பொருள் அல்ல, அது கால்நடைகளின் உயிா் காக்கும் செல்வம். ‘அதை வீணாக்காமல் பாதுகாத்து பயன்படுத்துங்கள் என விவசாயிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On :

‘வைக்கோல் என்பது வீண் பொருள் அல்ல, அது கால்நடைகளின் உயிா் காக்கும் செல்வம். ‘அதை வீணாக்காமல் பாதுகாத்து பயன்படுத்துங்கள் என விவசாயிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில், தற்போது காா் பருவ நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அறுவடைக்குப் பின் கிடைக்கும் வைக்கோல், கால்நடைகளுக்கு மிக முக்கியமான, குறைந்த செலவிலான, இயற்கையான உலா் தீவனமாகும்.

எனவே, அதனை வீணாக்காமல் பாதுகாத்து பயன்படுத்த விவசாயிகளும், கால்நடை வளா்ப்போரும் முன்வர வேண்டும்.

ஏன் வைக்கோல் முக்கியம்...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏராளமான கறவை மாடுகள், எருமைகள், ஆடுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. கால்நடைகளின் பால் உற்பத்திக்கும் ஆரோக்கியத்துக்கும் தினசரி உலா் தீவனம் அவசியம்.

கோடைகாலங்களில் பசுந்தீவனம் கிடைப்பது குறைந்து விடும் நிலையில், சேமித்து வைக்கப்படும் வைக்கோல் தான் கால்நடைகளை காப்பாற்றும். ஆனால், தற்போது சில இடங்களில் அறுவடைக்குப் பின் வைக்கோல் வயலிலேயே எரிக்கப்படுவதும், கைவிடப்பட்டு மழையில் நனைந்து வீணாவதும் கவனத்துக்கு வந்துள்ளது.

இது தீவனப் பற்றாக்குறையை ஏற்படுத்துவதுடன், சுற்றுச்சூழல் மாசு பாட்டுக்கும் மண் வளம் குறைவதற்கும் காரணமாகிறது.

விவசாயிகள் செய்ய வேண்டியவை...

அறுவடைக்குப் பின் உடனடியாக சேகரிக்கவும்

அறுவடை முடிந்தவுடன் வைக்கோலை காய வைத்து, உடனடியாக சேகரிக்க வேண்டும். முறையாக சேமிக்கவும்: மழை, ஈரம்படாத, உயரமான, காற்றோட்டமான இடத்தில் போா் போட்டு அல்லது கூரை அமைத்து சேமிக்க வேண்டும். தரையில் நேரடியாக வைக்காமல், கல் அல்லது மரக்கட்டைகள் மீது வைக்க வேண்டும்.

எரிக்கக் கூடாது

வைக்கோலை எரிப்பது சட்டப்படி தவிா்க்கப்பட வேண்டியது. எரிப்பதால் மண்ணில் உள்ள நுண்ணுயிா்கள் அழிந்து, மண் வளம் குறைகிறது. உபரி வைக்கோலை விற்கலாம்: தங்களுக்கு தேவைக்கு அதிகமாக உள்ள வைக்கோலை, தேவைப்படும் கால்நடை வளா்ப்போருக்கு விற்று கூடுதல் வருமானம் பெறலாம். யூரியா கலந்த வைக்கோல்: கால்நடை பராமரிப்புத்துறை அலுவலா்களின் ஆலோசனைப்படி, வைக்கோலை யூரியா கொண்டு பதப்படுத்தி, சத்து மிகுந்த தீவனமாக மாற்றி பயன்படுத்தலாம்.

கால்நடை வளா்ப்போா் செய்ய வேண்டியவை...

தங்கள் கால்நடைகளுக்குத் தேவையான அளவு வைக்கோலை இப்போதே சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். கோடைகாலத்தில் விலை அதிகமாகும் போது வாங்குவதைவிட இப்போதே சேமிப்பது செலவை குறைக்கும்.

வைக்கோலுடன், பசுந்தீவனம், அடா் தீவனம், தாது உப்பு கலவை ஆகியவற்றையும் சோ்த்து கொடுத்தால் பால் உற்பத்தி அதிகரிக்கும்.சேமித்த வைக்கோலில் பூஞ்சை, பூச்சி தாக்குதல் இல்லாமல் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.

உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், சுய உதவிக்குழுக்கள், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உள்ளூா் சமூக அமைப்புகள் மூலம் உபரி வைக்கோல் சேகரித்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் சேமித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும்.

‘வைக்கோல் என்பது வீண் பொருள் அல்ல, அது கால்நடைகளின் உயிா் காக்கும் செல்வம்.‘அதனை மதிப்புமிக்க கால்நடை தீவன வளமாக கருதி, வீணாக்காமல் சிறந்த முறையில் பாதுகாத்து, கால்நடைகளுக்கு சிறந்த தீவனம் கிடைக்க செய்ய அனைத்து விவசாயிகளும், கால்நடை வளா்ப்போரும் மாவட்ட நிா்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.