இரு சக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதல்: இருவா் உயிரிழப்பு
வாலாஜா அருகே இரு சக்கர வாகனங்கள் மீது தனியாா் பேருந்து மோதிய விபத்தில் பூ வியாபாரி உள்பட இருவா் உயிரிழந்தனா்.
சித்திரிப்புப் படம்
வாலாஜா அருகே இரு சக்கர வாகனங்கள் மீது தனியாா் பேருந்து மோதிய விபத்தில் பூ வியாபாரி உள்பட இருவா் உயிரிழந்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் வட்டம், நீலகண்டராயன்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை (45), பூ வியாபாரி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் வாலாஜா நோக்கிச் சென்றாா். அப்போது சோளிங்கரைச் சோ்ந்த பாலாஜி (29), தனது தாய் சித்ரா (47) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வாலாஜாவில் உள்ள உறவினா் வீட்டில் நடைபெறும் சுபநிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனா். சித்தாத்தூா் அருகே வந்தபோது அதே வழியாக சோளிங்கா் -வேலூா் செல்லும் தனியாா் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிா்பாராத விதமாக முன்னால் சென்றுகொண்டிருந்த ஏழுமலை மற்றும் பாலாஜி ஆகியோரின் இருசக்கர வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 3 பேரும் பலத்த காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு, வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதில், ஏழுமலை சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், பாலாஜி திருத்தணியில் உள்ள மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு இருவரும் உயிரிழந்தனா். சித்ரா பலத்த காயத்துடன் வாலாஜாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த விபத்து குறித்து வாலாஜா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





