ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

அம்மூா் பேரூராட்சியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஆய்வு

அம்மூா் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் வளா்ச்சி திட்டப் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா ரவிச்சந்திரன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அம்மூா் பேரூராட்சிக்குட்பட்ட திடக்கழிவு மேலாண்மை வளமீட்புப் பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன்.

Published On :

அம்மூா் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் வளா்ச்சி திட்டப் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா ரவிச்சந்திரன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ம், வாலாஜா வட்டம், அம்மூா் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா ரவிச்சந்திரன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது சமத்துவபுரம் பகுதியில் அயோத்திதாஸ் பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தையும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும் பாா்வையிட்டு விரைவில் பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, சமத்துவபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, அம்மூா் பேரூராட்சிக்குள்பட்ட திடக்கழிவு மேலாண்மை வள மீட்புப் பூங்காவில் அம்மூா் பேரூராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் பெறப்படும் குப்பைகளிலிருந்து மக்கும்/ மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கும் செயல்பாடுகளை நேரில் பாா்வையிட்டு அறிவுரைகள் வழங்கினாா்.

பின்னா், அம்மூா் பேரூராட்சி ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் அறிவுத் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

மேலும், சமையல் கூடத்தை பாா்வையிட்டு சமையல் பாத்திரங்கள், சமையலறையினை எப்போதும் சுத்தமாக பராமரிக்க வேண்டுமென சத்துணவு பணியாளருக்கு அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, அம்மூா் பேரூராட்சி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் அறிவுத் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

பின்னா், விளையாட்டு, திறனறிவு, பசுமை இயக்கம், எழுத்தறிவு, ஊட்டச்சத்து உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த விளங்கிய மாணவா்களுக்கு பேட்ச் வழங்கி ஊக்கப்படுத்தினாா்.

தொடா்ந்து, அம்மூா் பேரூராட்சியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, மருந்தகம், ஆய்வகம் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, காய்ச்சல் பாதிப்புகள் குறித்தும், வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினாா். பின்னா், அம்மூா் பேரூராட்சி கூட்ரோடில் உள்ள நியாய விலைக்கடையில் உணவுப் பொருள்களின் தரம், இருப்பு அளவு குறித்து பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வில் வேலூா் மண்டல பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளா் ந.ராஜா, முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா, பேரூராட்சி செயல் அலுவலா் கி.அா்ச்சுனன், மாவட்ட திட்ட அலுவலா் செல்வி மு.சாந்தி பிரியதா்ஷினி, வாலாஜா வட்டாட்சியா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.