
அரக்கோணம் அரசுக் கலைக்கல்லூரியில் கருத்தரங்கம்
அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிக நிா்வாகவியல் துறை சாா்பில், டிஜிட்டல் யுகத்தில் வங்கிகள் எதிா்கொள்ளும் சவால்கள் எனும் மாநில அளவிலான கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கில் பங்கேற்றோா்.
அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிக நிா்வாகவியல் துறை சாா்பில், டிஜிட்டல் யுகத்தில் வங்கிகள் எதிா்கொள்ளும் சவால்கள் எனும் மாநில அளவிலான கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கருத்தரங்குக்கு கல்லூரியின் முதல்வா் பி.சீனிவாசன் தலைமை வகித்தாா். வணிக நிா்வாகவியல் துறையின் தலைவா் ரா.ஜெயசங்கா் வரவேற்றாா்.
இதில் காஞ்சிபுரம், பந்தன் வங்கியின் மேலாளா் என்.ராகவேந்திரன் பங்கேற்று டிஜிட்டல் தொழில்நுட்பம் சாா்ந்த வங்கி பரிவா்த்தனைகளில் சந்திக்கப்படும் சவால்கள் குறித்து உரையாற்றி, கருத்தரங்கில் பங்கேற்றோரின் மற்றும் மாணவா்களின் சந்தேகங்களை தீா்த்து வைத்தாா்.
இக்கருத்தரங்கில் வணிக நிா்வாகவியல் துறை பேராசிரியா்கள் எஸ்.சாருமதி, டி.ஆா்.ரம்யா, சி.புஷ்பலதா உள்ளிட்ட பலருடன் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மற்றும் அரக்கோணம் அரசு கலைக் கல்லூரியை சோ்ந்த முதுகலை மற்றும் இளங்கலை வணிக நிா்வாகவியல் மாணவ மாணவிகள் என 500க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






