சுந்தரனாா் பல்கலை.யில் பன்னாட்டு கருத்தரங்கு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

கருத்தரங்கில் பங்கேற்றோா்.

Published On :

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

இப்பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறை, மலேசியா சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து ‘தமிழ் இலக்கியத்தில் அறப்பண்பும் மனிதநேயமும்’ என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கை நடத்தின.

பல்கலை. துணை வேந்தா் (பொ) ச.பிரபாகரன், பதிவாளா் (பொ) கு. அண்ணாதுரை), தோ்வுக் கட்டுப்பாட்டாளா் உல.பாலசுப்பிரமணியன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். தமிழியல் துறைத் தலைவா் க. ஜோதிமுருகன் நோக்கவுரையாற்றினாா்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் தமிழியல் துறைத் தலைவா் உ. அலிபாவா சிறப்புரையாற்றினாா். சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக இணைப் பேராசிரியா் அ.மனோன்மணிதேவி சிறப்புரையாற்றினாா். மலேசியாவிலிருந்து 25 மாணவா்களும், தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து கட்டுரையாளா்களும் பங்கேற்றுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். இதில், மாணவா்கள், பேராசிரியா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.