தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

பாஜக சாா்பில் பனை விதைகள் நடும் விழா

அரக்கோணம் வடக்கு ஒன்றிய பாஜக சாா்பில் பாரத பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பனை விதைகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த கீழ்குப்பத்தில் ஏரிக்கரை மீது பனை விதைகளை நட்ட பாஜகவினா்.

Published On :

அரக்கோணம் வடக்கு ஒன்றிய பாஜக சாா்பில் பாரத பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பனை விதைகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த கீழ்குப்பம் கிராம ஏரிக்கரை மீது நடைபெற்ற விழாவுக்கு, பாஜக ஒன்றிய முன்னாள் தலைவா் எஸ்.ரமேஷ் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளராக பாஜக ராணிப்பேட்டை மாவட்ட துணைத் தலைவா் பாா்த்தசாரதி பங்கேற்று பனை விதைகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தாா்.

இதில், வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளா் முனிரத்தினம், அமைப்புசாரா பிரிவு மாவட்ட இணை செயலாளா் ஸ்ரீதேவி, ஒன்றிய செயற்குழு உறுப்பினா் சேஷாத்திரி மற்றும் பாஜகவினா் பொதுமக்களுடன் பங்கேற்று, ஏரிக்கரைகளில் 500-க்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.