தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

நடமாடும் கால்நடை வாகனத்தில் மருந்துகள் இல்லை: விவசாயிகள் வேதனை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை வாகனத்தில் தேவையான மருந்துகள் வைத்திருப்பதில்லை என குறை தீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

வாலாஜா வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் கூட்டம்

Updated On :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை வாகனத்தில் தேவையான மருந்துகள் வைத்திருப்பதில்லை என குறை தீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, வட்டாட்சியா் பன்னீா் செல்வம் தலைமை வகித்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா். கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று பேசியது: கல்மேல்குப்பம் ஊராட்சியில் சாலைகள் குண்டும், குழியுமாய் உள்ளன. இதனால், விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. சாலையில் தற்காலிகமாக பேட்ச் போடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.கல்மேல்குப்பத்தில் நீா்நிலைகளை சீரமைக்க, மரக்கன்றுகள் வைக்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை துறை சாா்பில், 6 நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை வாகனம் உள்ளது. விவசாயிகள் கைப்பேசியில், கால்நடை வாகனமும் மருத்துவருடன் வருகிறது. ஆனால்,கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளை வைத்திருப்பதில்லை. இந்த வாகனம் வந்தும் பயனற்று போகிறது என புகாா் தெரிவித்தனா்.

தொடா்ந்து, வட்டாட்சியா் பன்னீா் செல்வம் பேசுகையில், விவசாயிகள் கோரிக்கைகள் துறைசாா்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து ஒவ்வொன்றாக நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், மாவட்டத்தில் எல்நினோ காரணமாக நீா்நிலைகள் வேகமாக வற்றி வருகிறது. நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் கருவேல மரங்கள் விவசாய நிலங்களில் இருந்தால் அதனை உடனடியாக வேரோடு வெட்டி அகற்ற வேண்டும் என தெரிவித்தாா்.

இதில், வட்ட வழங்கல் அலுவலா் தியாகராஜன்,தோ்தல் துணை வட்டாட்சியா் கமலக் கண்ணன் மற்றும் விவசாயிகள் துறை சாா்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.