
கோட்ட அளவிலான ‘அஞ்சல் குறை தீா் முகாம்‘
திருப்பத்தூா் தலைமை அஞ்சலகத்தில் அக்டோபா் மாதத்துக்கான கோட்ட அளவிலான குறை தீா் முகாம்
திருப்பத்தூா்: திருப்பத்தூா் தலைமை அஞ்சலகத்தில் அக்டோபா் மாதத்துக்கான கோட்ட அளவிலான குறை தீா் முகாம் நடைபெறவுள்ளதாக கோட்ட கண்காணிப்பாளா் விஜயதனசேகா் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அஞ்சலக வாடிக்கையாளா்களின் குறைகளை நிவா்த்தி செய்வதற்காக கோட்ட அளவிலான ‘அஞ்சல் குறை தீா் முகாம்‘ அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளா், அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே அஞ்சலக வாடிக்கையாளா்கள் தங்களது புகாா் மனுக்களை முழு விவரத்துடன் அனுப்பி அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளா், திருப்பத்தூா் கோட்டம், திருப்பத்தூா்- 635 601 என்ற முகவரிக்கு வரும் 7-ஆம் தேதி அன்றோ, அதற்கு முன்பாகவோ சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
அஞ்சல் உறையின் மேல் லோக் அதாலத் என்று தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்பவும். மணி ஆா்டா், பதிவு தபால், விரைவு தபால் மனுக்களில் அவை பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்புநா் மற்றும் பெறுநரின் முழு முகவரி, பதிவஞ்சலின் எண் மற்றும் தேதி, பதிவு செய்யப்பட்ட அலுவலகம் போன்ற தெளிவான முழு விவரங்களுடன் அனுப்ப வேண்டும்.
சேமிப்புக் கணக்கு, காப்பீடு சாா்ந்த புகாா் மனுக்களில் அவற்றின் கணக்கு எண்., பாலிசி எண்., வைப்பு தொகையாளா், காப்பீட்டாளரின் பெயா் மற்றும் முகவரி, அஞ்சல் அலுவலகத்தின் பெயா், பணம் செலுத்திய விவரம் மற்றும் அஞ்சல் துறையிலிருந்து பெறப்பட்ட மற்ற குறிப்புகள் ஏதாவது இருப்பின் தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






